பீஸ்ட் படத்தின் கதை என்ன..? விஜய் நடித்துள்ள கதாபாத்திரம்..? வெளிவந்த செம மாஸ் தகவல்

by Lifestyle Editor

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்துள்ள படம் பீஸ்ட்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடல் புத்தாண்டு அன்று வெளியாக பெரிதும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படம் தங்க கடத்தலை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய் ராணுவ கமாண்டோவாக நடித்துள்ளார் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பு தான் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தை போதைப் பொருள் கடத்தலை மையமாக எடுத்திருந்தார்.

அதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படத்தை குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து இயக்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment