அடிக்கடி பீட்சா சாப்பிடுபவரா.. நோய்களை தெரிஞ்சுக்கோங்க ..

by Lifestyle Editor

ஜங்க் ஃபுட்டாக இருந்தாலும் கூட பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது பீட்சா. சமீபத்திய ஆண்டுகளில் எண்ணற்ற புது புது உணவுகள் வந்து விட்டாலும் கூட மக்களுக்கு பீட்சா மீதான ஆர்வம் சிறிதும் குறையவில்லை.

பீட்சாவின் தனித்துவமான சுவைக்கு, சீஸ் சேர்க்கப்படுவது மற்றும் நமது விருப்பத்திற்கு ஏற்ப பீட்சாக்களின் டாப்பிங்ஸை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மேலும் பீட்சாக்கள் விரைவாக கிடைக்க கூடியவையாக இருக்கின்றன. சிலர் Frozen Pizza-க்களை வாங்கி வைக்கிறார்கள். இவற்றை வெறும் 10 நிமிடங்களில் சூடுபடுத்தி சாப்பிடலாம்.

சிலர் அடிக்கடியோ அல்லது வாரம் தவறாமல் ஒருமுறையாவது பீட்சா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரபலமாக இருந்தாலும் கூட பீட்சா ஒரு ஜங்க் ஃபுட் என்பதால் இதனை அடிக்கடி சாப்பிடுவதால் சில உடல்நல அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பீட்சா சாப்பிடுவதால் ஏற்பட கூடிய முக்கிய உடல்நல அபாயங்கள் இங்கே.

இதய நோய் அபாயம் : பீட்சாவில் சீஸ் மற்றும் ப்ராசஸ்டு மீட் டாப்பிங்ஸ் இருப்பதன் காரணமாக நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) அதிகம் காணப்படுகின்றன. இதனால் உங்கள் கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிக்க கூடும் மற்றும் இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரிக்கிறது. வழக்கமான அடிப்படையில் 3 – 4 பீட்சா ஸ்லைஸ்கள் அல்லது அதற்கு மேல் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

வேகமாக எடை அதிகரிக்கும் : ப்ளைன் சீஸ் பீட்சாவின் ஒரு ஸ்லைஸில் தோராயமாக 400 கலோரிகள் உள்ளன. எனவே ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பீட்சா ஸ்லைஸ்களை சாப்பிடுவது கூட உங்கள் டயட்டில் சுமார் 800 முதல் 1,200 கலோரிகளை சேர்க்கிறது. தவிர Pepperoni போன்ற ப்ராசஸ்டு டாப்பிங்ஸை பீட்சாவில் சேர்க்கும் போது கலோரிகள் அளவு மேலும் அதிகரிக்கும். ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000 கலோரிகளை உட்கொள்வதால், சில பீட்சா ஸ்லைஸ்கள் சாப்பிட்டாலே உங்கள் தினசரி கலோரி நுகர்வில் 40% முதல் 60% வரை நிரம்பி விடும். நீங்கள் அன்றைய நாளில் பிற உணவுகளையும் சாப்பிட்டிருப்பீர்கள் அல்லது சாப்பிடுவீர்கள். எனவே நீங்கள் அடிக்கடி பீட்சா சாப்பிடுவது உங்களது தினசரி கலோரி நுகர்வை மிகவும் அதிகரித்து வெகுவிரைவாக உடல் எடை கூடும் அபாயம் ஏற்படுகிறது.

கேன்சர் அபாயம் அதிகரிக்கிறது : Pepperoni, Bacon மற்றும் Sausage போன்ற ஹை-ஃபேட் ப்ராசஸ்ட் இறைச்சிகளை உங்கள் பீட்சாவின் டாப்பிங்ஸாக கொண்டு சாப்பிடுவது குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற சில வகை கேன்சர்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. பீட்சாவை எப்போதாதாவது சாப்பிட்டால் பிரச்சனை அதிகம் ஏற்படாது. ஆனால் இதனை அடிக்கடி சாப்பிடுவது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். பீட்சா சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவு என்பதால் செரிமானத்தை மெதுவாக்கும்,வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கும்.

பீட்சாவை சாப்பிடுவதற்கு பாதுகாப்பான வழி… பீட்சா சாப்பிட பாதுகாப்பான மற்றும் சிறந்த வழி இதனை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம். வீட்டிலேயே செய்வதால் பீட்சாவில் சேர்க்க நீங்கள் ஆரோக்கியமான பொருட்களை தேர்வு செய்யலாம் மற்றும் சீஸ் அளவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். அதே போல மைதாவிற்குப் பதிலாக, ஹோல் வீட் ரொட்டி போன்ற ஆரோக்கியமான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பீட்சா பேஸை நீங்கள் பீட்சா தயாரிக்க தேர்வு செய்யலாம். நீங்கள் வெளியில் இருந்து பீட்சா வாங்கி சாப்பிட விரும்பினால் பீட்சா ஸ்லைஸ்களை லிமிட்டாக சாப்பிடுங்கள் மற்றும் அடிக்கடி சாப்பிடாமல் எப்போதாவது வாங்கி சாப்பிடுங்கள்.

Related Posts

Leave a Comment