இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு எவ்வித அடையாளம் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை .. எஸ்பிஐ ..

by Lifestyle Editor

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு எவ்வித அடையாளம் சான்றிதழ்களையும் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, அவற்றைச் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவோ, கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவோ அறிவுறுத்தியது.

இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது வங்கியில் தரப்படும் படிவத்தை நிரப்ப வேண்டும் எனவும், ஆதார் அட்டை போன்ற அடையாளச் சான்று ஒன்றைக் காட்ட வேண்டும் எனவும் தகவல்கள் பரவிவந்தன.

ஆனால், எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடையாளச் சான்று ஏதும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கிளை வங்கிகளுக்கு, தலைமை பொது மேலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாடிக்கையாளர்கள் அடையாள சான்றுகள் அளிக்காமல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு நபர் ஒரு நேரத்தில் 20,000 ரூபாய் மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மட்டுமே மாற்றலாம் என்ற நிபந்தனை பின்பற்றப்படவுள்ளது.

Related Posts

Leave a Comment