+2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் ..

by Lifestyle Editor

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள்துறை அறிவித்துள்ளது. விடைத்தாள் நகலுக்கு ரூ.275 ரூபாயும், மறுகூட்டலுக்கு ரூ.205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment