இயேசுவின் சிலுவை ஊட்டிக்கு கொண்டுவரப்பட்ட நாள்.. குருசடி திருத்தலத்தில் கோலாகல திருவிழா ..

by Lifestyle Editor

உலக புகழ்பெற்ற நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குருசடி திருத்தலத்திற்கு மே 3ம் தேதி இயேசு சுமந்த சிலுவையில் ஒரு பகுதி கொண்டுவரப்பட்டுள்ளதாக கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மே 3ம் தேதி இந்த திருத்தலத்தில் குருசடி திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு குருசடி திருவிழாவில் கலந்து கொள்ளவும், புதுப்பிக்கப்பட்ட தேவாலயத்தை ஆசீர்வதிப்பதற்காகவும் ரோம் நாட்டில் இருந்து திருத்தந்தை பிரான்சிஸ், இந்திய தூதரகத்தை சார்ந்த பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி, குருசடி திருத்தலத்திற்கு வருகை புரிந்து நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் அவரை காணவும், திருத்தளத்தில் ஜெபம் செய்வதற்காகவும் ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடினர். இதனைத்தொடர்ந்து புதிதாக புதுப்பிக்கப்பட்ட திருத்தலம் குகை கோவில் இயேசு சுமந்த சிலுவையில் ஒரு பாகம் மற்றும் கல்லறை உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவர்கள் வழிபட்டு சென்றனர்.

Related Posts

Leave a Comment