ஏழில் சந்திரன் இருந்தால் ஏற்படும் திருமண தடையும்…. பரிகாரமும்…

by Lifestyle Editor

சந்திரன் ஒரு குளிர்ந்த கிரகம். திருமண உறவில் சந்திரன் உடலையும் மனதையும் குறிக்கும் காரக கிரகம். சந்திரன் என்றால் நீர், நீரும் மனமும் ஒரு நிலையில் நிற்காது. இங்கும் அங்கும் அலைந்து கொண்டே இருக்கும். திருமண விசயத்தில் வரன் குறித்து தெளிவாக முடிவு செய்யும் தன்மை இருக்காது. நடக்காததை நடப்பதாக கற்பனை பண்ணுவார்கள்.

சந்திரன் ராகுவின் சாரம் பெற்றால் திருமணத்தை நடத்தி பிரச்சனை தரும். கேதுவின் சாரம் பெற்றால் திருமணத்தை நடத்தாமல் பிரச்சினை தரும். சந்திரன் உடைபட்ட நட்சத்திரங்களான சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் திருமணத் தடை இருக்கும்.

சந்திரன் பாசத்தை பொழியும் கிரகம். ஏழில் சந்திரன் திருமணத்திற்கு பிறகு தாயின் பாசத்தை களத்திரத்திடம் ஒப்பிட்டு பிரச்சினையை அதிகரிப்பார்கள் அல்லது தங்களின் அந்தரத்தைப் பற்றிய அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து களத்திரத்தின் வெறுப்பை சம்பாதிப்பார்கள்.

கர்மா ரீதியாக இதை உற்று நோக்கினால் தாய் வழியில் 21 தலைமுறையாக வாழாத பெண்கள் இருப்பார்கள்.தினமும் கண்ணீர் விட்டு அழுத பெண் சாபம். தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்தவர் சாபம், வயதான தாயை முறையாக பராமரிக்காத குற்றம், ஒரு பெண்ணை மனநலம் பாதிக்கும் வகையில் துன்புறுத்தியதன் வினைப்பதிவாகும்.

பரிகாரம்

திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திர ஓரையில் அம்பிகைக்கு 10 வாரம் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். வயது முதிர்ந்த 11 பெண்களுக்கு பச்சரிசி உணவு 11 வாரம் தண்ணீருடன் தானம் தர வேண்டும்.

Related Posts

Leave a Comment