அரசு பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு ஆர்வம் குறைந்ததா? – 14,000 பேர் மட்டுமே விண்ணப்பிப்பு …

by Lifestyle Editor

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கடந்தாண்டை விட இந்தாண்டு குறைவான அரசு பள்ளி மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் வருகிற 07ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 499 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு மே 07-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கடந்தாண்டை விட, இந்தாண்டு குறைவான அரசு பள்ளி மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கடந்தாண்டு 17,972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 12,840 பேர் தேர்வில் பங்கேற்ற நிலையில், மற்றவர்கள் ஆப்சண்ட் ஆகினர். இந்நிலையில், இந்தாண்டு 14,000 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

Related Posts

Leave a Comment