களைகட்டும் திருவண்ணாமலை தீபத் திருவிழா! சிறப்பு ரயில்களை இயக்க முடிவு!

by Lifestyle Editor

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள தீபத்திருவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் வர உள்ளதால் சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் நடந்த திருவண்ணாமலை தீபத்திருவிழா இந்த முறை பக்தர்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நவம்பர் 27ம் தேதி கொடியேற்றம் தொடங்கி விழாவின் சிகர நிகழ்வான மகாதீப நிகழ்வு டிசம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக திருவண்ணாமலைக்கு பல பக்தர்களும் செல்வார்கள் என்பதால் ஏற்கனவே தமிழக போக்குவரத்து கழகம் அனைத்து பகுதிகளில் இருந்தும் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு ரயில்கள் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் இயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

Related Posts

Leave a Comment