ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று …

by Lifestyle Editor
0 comment

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி தொடர்பான நாடாளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

மேலும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடவுள்ளனர்.

Related Posts

Leave a Comment