கோவையில் ஒரு வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் ..

by Lifestyle Editor

தமிழ்நாட்டில் கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வடவள்ளியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதுபோல திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் 3 பேர் கொரோனாவால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment