இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கான தடை தொடரும் – அசோக் கே மீனா

by Lifestyle Editor

நாட்டில் கோதுமை ஏற்றுமதிக்கான தடை தொடரும் என இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே மீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே மீனா, “உள்நாட்டு விநியோகத்திற்கு பிரச்னை இல்லை என்ற நிலை வரும் வரை கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும். சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்படவில்லை. உற்பத்தி இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாடு முழுவதும் கோதுமை கொள்முதல் தொடங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 10,727 டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment