சிகப்பு அரிசியில் குழிப்பணியாரம் செய்வது எப்படி …

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

சிகப்பு அரிசி – 2 கிண்ணம்,

உளுந்து – 1 கிண்ணம்,

வெந்தயம் – 2 கரண்டி,

வெங்காயம் – 2,

பச்சை மிளகாய் – 4,

இஞ்சி – 1 கரண்டி அளவு,

கடுகு-உளுந்தம்பருப்பு – அரை கரண்டி,

கறிவேப்பில்லை, தேங்காய் துருவல், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சிவப்பு அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியே 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் இதனை அரைத்து உப்பு சேர்த்து 4 மணிநேரம் புளிக்கவிட வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பில்லை. இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

இறுதியில் குழிப்பணியார கல்லில் எண்ணெய் விட்டு மாவை சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுத்தால் சுவையான சிவப்பு அரிசி காரப்பணியாரம் தயார்.

Related Posts

Leave a Comment