உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் .. மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ ..

by Lifestyle Editor

தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு நீதித்துறை கட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் சிறப்பாக செயல்பட்டு நீதியை வழங்கியுள்ளன. காவல்துறையினர் பொதுமக்களிடம் மென்மையான போக்கினை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு நீதித்துறை உள்கட்டமைப்புக்கு ரூ.9,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நீதித்துறைக்கு வழங்கும் நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இ- கோர்ட் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் நீதிமன்றங்களில் காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பணிகள் நடைபெறும்.இ – கோர்ட் திட்டத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் ஒரு நாளைக்கு 7 வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுக்கின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 60 வழக்குகளுக்கு மேல் விசாரணை நடைபெறுகிறது. தொழில்நுட்ப வசதிகள் வழக்குகளை விரைவாக முடிக்க உதவும். பழமை மற்றும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழ், விரைவில் உச்சநீதிமன்றத்தில் பயன்பாட்டிற்கு வரும்.தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

Related Posts

Leave a Comment