திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டண சேவை டிக்கெட் முன்பதிவு விவரம் ..

by Lifestyle Editor

திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டண சேவை டிக்கெட்டுகள் முன்பதிவிற்காக நாளை மறுநாள் 23 தேதி ஆன்லைனில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைகளை மட்டுமே பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் வரும் ஜூன் மாதம் கட்டண சேவையில் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 23ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற கட்டண சேவைகளில் பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர்.

அவற்றுக்கான டிக்கெட்டுகள் வரும் 23 தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளன.

அதேபோல் ஜூன் மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்கப் பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும், குலுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் ஜூன் மாதத்துக்கான கட்டண சேவை டிக்கெட்டுகள் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் www. tirupathibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment