பால் பொங்கல் ஈஸி ரெசிபி இதோ.!

by Lifestyle Editor

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். ஆனால் குழந்தைகள் பொதுவாக சர்க்கரைப் பொங்கலை விரும்பி சாப்பிடும் அளவிற்கு வெண் பொங்கலை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் குழந்தைகளுக்கு இந்த பால் பொங்கலை செய்து கொடுங்கள் அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் :

அரிசி – 1/4 கிலோ

பால் – 1 லிட்டர்

சர்க்கரை – 1/2 கிலோ

ஏலக்காய்த்தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

வறுத்த முந்திரி பருப்பு – 20

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

நெய் – 100 மில்லி

செய்முறை :

அரிசியுடன் பாலைக் கலந்து உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
இத்துடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கிளறி நெய் விட்டு இறக்கினால், சுவையான குழந்தைகளுக்கு பிடித்த பால் பொங்கல் தயார்.

குறிப்பு : இந்த பால் பொங்கலை குக்கருக்கு பதில் பொங்கல் பானையிலும் செய்யலாம். மேலும் சர்க்கரைக்கு பதில் கற்கண்டையும் பயன்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment