உலக நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழகத்தை நோக்கி வருகின்றன – முதலமைச்சர் பேச்சு …

by Lifestyle Editor

தொழில் தொடங்க உலக நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன என திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று (29.12.2022) திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.238.41 கோடி செலவில் 5635 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.308.29 கோடி மதிப்பீட்டிலான 5951 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 22.716 பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தற்போது புதிய புதிய துறைகளில் முதலீடுகள் நாம் ஈர்த்துவருகிறோம். தொழில் தொடங்க உலக நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. இந்த அரசு விழா மக்கள் நல்வாழ்வு விழாவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனை ஒருங்கினைத்து செயல்படுத்திய அனைவருக்கும் எனது நன்றி. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன், மணிமேகலை விருது, முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்தல், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய விழா இது. திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளது. பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே ஆண்டில் ஒரு கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றக்கூடிய ஆட்சியாக நமது ஆட்சி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts

Leave a Comment