முக்கிய நபரை தளபதி 67ல் உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்.. செம அறிவிப்பு ..!

by Lifestyle Editor

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என தெரியவந்தது.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், முதல் முறையாக இப்படத்தில் கமிட்டாகியுள்ள முக்கிய பிரபலம் குறித்து இயக்குனர் லோகேஷ் உறுதி செய்துள்ளார்.

ஆம், இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதை சமீபத்தில் லோகேஷ் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். இதன்முலம் ரசிகர்களுக்கு செம அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

Related Posts

Leave a Comment