தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

by Lifestyle Editor

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழக கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும் என்பதாலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், டிசம்பர் 20 ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தொடர்ந்து 21 ஆம் தேதி தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment