இந்திய – சீன எல்லை மோதல் விவகாரம் ..

by Lifestyle Editor

இந்திய – சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 09ம் தேதி அருணாசல பிரதேச எல்லையில் இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் நேற்று தெரிவித்து இருந்தது. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவையிலும் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். ராஜ்நாதி சிங் விளக்கம் அளித்திருந்த போதிலுக், தங்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று நாடாளுமன்றம் கூடியதும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பின. இதனால், மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts

Leave a Comment