குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம்

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி அரிசி – 100 கிராம்,
இட்லி அரிசி – 100 கிராம்,
உளுந்து – 25 கிராம்,
வெந்தயம் – அரை தேக்கரண்டி,
கருப்பட்டி – 200 கிராம்,
இளநீர் – அரை கப்.

செய்முறை:

குதிரைவாலி அரிசியுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல் நாளே வாங்கி வைத்துப் புளிக்க வைக்க வேண்டும். புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும். கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து வேக விடவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும். சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம் தயார்.

Related Posts

Leave a Comment