மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 11,000 மின்ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் – அமைச்சர் தகவல் ..

by Lifestyle Editor

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 11,000 மின்ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கோவையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 2 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. கோவையை தமிழக முதலமைச்சர் புறக்கணிப்பதாக ஒரு சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். கோவையில் நடந்த இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.

மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.211 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதில் முதற்கட்டமாக 26 கோடி விடுவிக்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது. இரண்டாவது கட்டமாக 138 சாலைகளை சீரமைக்க ரூ.19 கோடியே 84 லட்சத்தை ஒதுக்கி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மொத்தத்தில் கோவை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் ரூ.200 கோடி சிறப்பு ரீதியாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் மார்ச் மாதத்தில் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

Leave a Comment