குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி 4.6% வாக்குகள் பதிவு ..

by Lifestyle Editor

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி அன்று நடைபெற்றது. இன்று 93 தொகுதிகளுக்கான 2வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறாது. காந்திநகர் ,வதோதரா, ஆமதாபாத் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம்.ஆத்மி மற்றும் 285 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 833 பேர் போட்டியில் உள்ளனர். இன்றைய தேர்தலில் மாநில முதல்வர் பூவேந்திரபடேல் உட்பட முக்கிய பிரபலங்கள் பலரும் போட்டியிடுகின்றனர். 14,975 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 1.13 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். வாக்களிக்க தகுதியான வாக்காளர்களாக 2. 51 கோடி பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர். 1.29 கோடி பேர் இதில் ஆண்கள் 1.22 கோடி பேர் பெண்கள். 5. 96 லட்சம் புதிய வாக்காளர்களும் இந்த பட்டியலில் உள்ளார்கள். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்குச்சாவடிக்கு நடந்து வந்து வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதனிடையே இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக காந்திநகர் தொக்குதியில் 7.05% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக தாஹோத் தொகுதியில் 3.37% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Posts

Leave a Comment