அக்டோபரை விட நவம்பரில் 1.5 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் அதிகரிப்பு ..

by Lifestyle Editor

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், பயண அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் லட்சங்களில் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் 1.15 லட்சம் பயணிகள் அதிகம் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்து உள்ளார்கள் என்றும், பயண அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.90 லட்சம் அதிகரித்திருக்கிறது என்றும் சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மற்றொரு நிர்வாக ரயில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 1.1. 2022 முதல் 31. 8. 2022 வரை மொத்தம் 3,57, 82, 117 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து உள்ளனர். 1.9. 2022 முதல் 30. 9 2022 வரை 61, 12, 906 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளனர் .

1.10. 2022 முதல் 31. 10. 2022 வரை மொத்தம் 61 ,56, 360 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்திருக்கிறார்கள்.

1.11. 2022 முதல் 30. 11. 2022 வரை மொத்தம் 62, 71, 730 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளனர் . அதிகபட்சமாக 7 .11. 2022 அன்று 2,47, 352 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்திருக்கிறார்கள்.

நவம்பர் மாதத்தில் மட்டும் க்யூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 18 ,22, 703 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளார்கள் என்றும், 18 அக்டோபர் மாதத்தில் 36 33 ,056 லட்சம் பயணிகள் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணித்து உள்ளார்கள் என்றும், நவம்பர் மாதத்தில் 40, 23, 296 பயணிகள் பயண அட்டை பயன்படுத்தி உள்ளார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.

அக்டோபர் மாதத்தை காட்டிலும் நவம்பர் மாதத்தில் 3,90,240 பயணிகள் அதிகமாக பயண அட்டையை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்று குறிப்பிட்டிருக்கிறது.

Related Posts

Leave a Comment