அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவீட்

by Lifestyle Editor

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ் கமல் நிறுவனத்தின் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment