இந்தியாவில் வேகமாக பரவும் அம்மை நோய் ..

by Lifestyle Editor

இந்தியாவில் அம்மை நோய் மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் தற்போது தான் அந்நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள மும்பை உள்பட ஒரு சில பெரிய நகரங்களில் அம்மை நோய் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடவில்லை என்றும் அதனால் குழந்தைகளுக்கு தட்டம்மை மிக வேகமாக பரவி வருகிறது என்றும் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து தவற விட்டு விட்டதாகவும், இதனை அடுத்து இந்த ஆண்டு முதல் அம்மை நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Related Posts

Leave a Comment