ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பிறகும் தணிக்கை ?

by Lifestyle Editor

அறுவை சிகிச்சையின் போது தவறுகள் நடைபெறுவது தடுப்பதற்காக, ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பிறகும் தணிக்கை செய்யும் நடைமுறை கொண்டு வருவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி பட்டப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மேலும் பட்ட மேற்படிப்பு இட ஒதுக்கீட்டுக்கான ஆடைகளையும் வழங்கினார்.

இதன் பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: மாணவி பிரியாவின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு. கோடிகளால் ஈடு செய்ய முடியாத இழப்புதான். நான்காவது மாடியில் இருந்த பிரியாவின் வீட்டிற்கு முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரியாவின் அண்ணனுக்கு தற்காலிக வேலை, குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவி, 420 சதுர அடி குடிசைமாற்று வீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவர்களுக்கு எந்த வேலை நிர்பந்தமும் கிடையாது. தவறுகளை தடுக்க மகப்பேறுக்குப் பிறகு, அது குறித்து தணிக்கை நடத்தப்படுகிறது. அதேபோன்று அனைத்து அறுவை சிகிச்சைக்கும் பிறகும் தணிக்கை நடத்தும் முறை அமல்படுத்தலாம். இது குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

Related Posts

Leave a Comment