கவிதை தினத்தில் தமிழ் மொழியில் தவிர்க்க முடியாத 4 கவிஞர்களை பற்றி தெரிந்து கொள்வோம்..!

by Column Editor

கவிதைகளில் பல வகை உண்டு என்றாலும், சங்க காலத்தில் இருந்து இப்போது வரை அனைவரின் மனம் கவர்ந்ததாக இருப்பது காதல் கவிதைகள் தான்.

நல்ல அழகான கவிதைகளுக்கு மயங்காத மனம் உண்டா? கவிதைகளில் பல வகை உண்டு என்றாலும், சங்க காலத்தில் இருந்து இப்போது வரை அனைவரின் மனம் கவர்ந்ததாக இருப்பது காதல் கவிதைகள் தான். அதேசமயம், பக்திப் பாடல்கள் அல்லது பக்தி இலக்கிய கவிதைகளையும் மக்கள் விரும்பி கேட்கின்றனர். பெரும்பாலனவர்களின் வீடுகளில் அதிகாலைப் பொழுது என்பது சங்க இலக்கிய பக்திப் பாடல்களின் ஒலி வடிவத்துடன் தொடங்குகிறது.

உலக கவிதை தினம் இன்று (மார்ச் 21) அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் தமிழ் கவிஞர்களை நாம் நினைவுகூர வேண்டும். உலக அளவில் மிகவும் பழமையானதாகக் கருதப்படும் தொல்காப்பியத்தை படைத்த தொல்காப்பியர், உலக பொதுமறையாம் திருக்குறளை படைத்த திருவள்ளுவர் என தமிழ் படைப்புலகில் எண்ணற்ற புலவர்கள் உண்டு. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என புகழப்படும் அளவுக்கு சிறந்து விளங்கியவர் கம்பராமாயணம் படைத்த கம்பர். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் என்றென்றும் போற்றி புகழத்தக்கது.

சங்க கால இலக்கியகங்கள் பலவும், மிகுந்த இலக்கிய நடையில் இருக்கும். அதுவே மகாகவி பாரதியாரின் வருகைக்கு பிறகு, மறுமலர்ச்சிப் பாடல்கள் அதிகம் வெளிவரத் தொடங்கின. உலகிலேயே முதன் முதலாக மொழிக்கு சங்கம் வைத்து வளர்த்த பெருமை கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற கவிஞர்கள் உண்டு என்றாலும், அவர்களில் சிலரை இன்றைய உலக கவிதை தினத்தில் நினைவுகூரலாம்.

பாரதிதாசன் :

20ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவர். கனகசபை சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இவர், பாரதியார் மீது கொண்ட காதலால் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். அவரது பாடல்கள் தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றுவதற்கு உதவிகரமாக இருந்தன. தமிழ்த்தாயை வாழ்த்தி இவர் இயற்றிய பாடல் தான், புதுச்சேரி மாநில அரசின் பாடலாக இருக்கிறது.

எஸ். அப்துல் ரஹ்மான் :

கவிஞர்களுக்கு மத்தியில் பேரரசரைப் போல இருந்தவர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், அங்கு தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார். வாணம்பாடி இலக்கிய இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர். இவரது படைப்புகளை பாராட்டி பல்வேறு தரப்பில் இருந்தும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிற்பி பாலசுப்பிரமணியன் :

தமிழ் உலகின் சிறப்புமிக்க கவிஞர்களில் இவரும் ஒருவர். பல்வேறு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலக்கிய படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்வதில் வல்லவர். சாஹித்ய அகாதமி விருது பெற்றவர். கடந்த 1970களில் வாணம்பாடி இலக்கிய இயக்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.

சுந்தர ராமசாமி :

நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பிகளில் மிக முக்கியமானவர். இவர் கேரளாவில் பிறந்தவர் என்பதால், மலையாளம் மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால், தனது 18ஆவது வயதில் தானே முயன்று தமிழ் கற்றுக் கொண்டவர். தனது 20ஆவது வயதில், மலையாள மொழிக் கவிஞர், தாகழி சிவசங்கர பிள்ளையின் ‘தூட்டியுதே மகான்’ என்ற படைப்பை தமிழில் திறம்பட மொழிபெயர்ப்பு செய்தவர்.

Related Posts

Leave a Comment