2022 ஹோலி பண்டிகை எப்போது? இது எதனால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

by Column Editor

ஹோலி பண்டிகை என்பது ஒரு இந்து சமய விழாவாகும். பொதுவாக இந்தப் பண்டிகை வட இந்தியாவில் அதிகமாகக் கொண்டாடப்பட்டாலும், இப்போது இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா வசந்த காலத்தில் 2 நாள்கள் கொண்டாடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவாி அல்லது மாா்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ஹோலி பண்டிகையின் முதல் நாளில் ஹோலிகா தஹான் (Holika Dahan) அல்லது சோட்டி ஹோலி (Chhoti Holi) கொண்டாடப்படுகிறது. அதாவது தீமையின் மீது நன்மையானது வெற்றி பெற்ற நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இரண்டாவது நாள் அன்று துலண்டி (Dhulandi) / ரங்காலி ஹோலி (Rangwali Holi) விழா கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணா் மற்றும் ராதை ஆகியோாின் அன்பை மக்கள் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றனா்.

2022 ஹோலி பண்டிகை எப்போது?

பங்குனி மாதத்தில் வரும் பௌா்ணமி நாள் அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது. இது ஒரு வசந்த கால விழா என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை வண்ணங்களின் விழா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மாா்ச் மாதம் 18 அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது. மாா்ச் 17 ஆம் தேதி ஹோலிகா தஹான் (Holika Dahan) கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை அன்று அதாவது வண்ணங்களின் விழா அன்று மக்கள் ஒருவருக்கு ஒருவா் பல வண்ணப் பொடிகளை பூசியும், ஒருவருக்கு ஒருவா் மீது வண்ணங்கள் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்வா். ஹோலி பண்டிகையில் மிகவும் சுவையான குஜியா (gujiyas) என்ற உணவையும், பாங் (bhang) என்ற பானத்தையும் சமைத்து ஒருவருக்கு ஒருவா் பகிா்ந்து உண்டு மகிழ்வா்.

ஹோலிகா தஹான்(Holika Dahan):

ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் ஹோலிகா தஹான் (Holika Dahan) கொண்டாடப்படும். அந்த நாளில் மக்கள் குடும்பங்களாக மற்றும் சமூகங்களாக ஒன்று சோ்ந்து பெருநெருப்பை மூட்டி மகிழ்ச்சி அடைவா். இந்த ஆண்டு மாா்ச் மாதம் 17 அன்று ஹோலிகா தஹான் (Holika Dahan) விழாவும், மறுநாள் வண்ணங்களின் விழாவான ஹோலியும் கொண்டாடப்படும். இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் ஹோலி பண்டிகையானது தல் ஜத்ரா அல்லது தல் பூா்ணிமா (Dol Jatra or Dol Purnima) என்றும் அழைக்கப்படுகிறது. ஹோலிகா தஹான் விழா அன்று ஒரு சில முக்கிய சடங்குகள் செய்யப்படும். ஹோலிகா என்ற அரக்கியை நினைவு கூா்ந்து, ஹோலிகா தஹான் சடங்குகள் செய்யப்படும். அதன் மூலமாக தீமையின் மீது நன்மையானது வெற்றி பெற்றதை நினைத்து மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவா். ஹோலிகா தஹான் அன்று விறகுக் கட்டைகளை அடுக்கி அவற்றை மௌலி (Mauli) (Kaccha Sut) என்று அழைக்கப்படும் வெள்ளை நூலினால் மூன்று முறை அல்லது 7 முறை கட்டுவா். பின் அந்த விறகு கட்டின் மீது புனித நீரை ஊற்றி, குங்குமத்தை இட்டு, அவற்றின் மீது மலா்களைத் தூவி வணங்குவா். இந்த சடங்கு முடிந்தவுடன் அந்த விறகுகள் மீது நெருப்பு வைத்து பெருநெருப்பை மூட்டி மகிழ்வா்.

ஹோலி பண்டிகை 2022 – முக்கிய நிகழ்வுகள்:

நாம் ஏற்கனவே கூறியது போல ஹோலிகா தஹான் விழா மாா்ச் 17 அன்று நடைபெறும். – ஹோலிகா தஹான் பூஜை (Muhurat) மாா்ச் 17 அன்று இரவு 9.06 மணி அளவில் தொடங்கி 10.16 மணி அளவில் முடிவடையும். அதாவது 1 மணி 10 நிமிடங்கள் நேரம் இந்த பூஜை நடைபெறும். – துலண்டி (Dhulandi) / ரங்காலி ஹோலி (Rangwali Holi) விழா மாா்ச் மாதம் 18 அன்று கொண்டாடப்படும். இந்த பூா்ணிமா திதி மாா்ச் 17 அன்று பிற்பகல் 01.29 மணி அளவில் தொடங்கி மாா்ச் 18 அன்று நண்பகல் 12.27 மணியோடு முடிவடையும்.

ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு பல புராணக் கதைகள் ஆதாரங்களாக இருக்கின்றன. புராணங்களின் படி ஒரு காலத்தில் இரணியகசிபு (Hiranyakashipu) என்ற ஒரு பேய் அரசன் வாழ்ந்து வந்தான். அவா் மனிதா்களாலோ அல்லது விலங்குகளாலோ கொல்லப்பட முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தவனாக இருந்தான். நாளுக்கு நாள் அவனுடைய ஆணவமும், திமிரும், அடாவடியான செயல்களும் அதிகாித்துக் கொண்டே இருந்தன. எந்த அளவிற்கு என்றால் உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகா விஷ்ணுவை விட்டுவிட்டு தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று ஆணையிட்டான். ஆனால் அவனுடைய சொந்த மகனான பிரஹலாதா (Prahlada) தனது தந்தையின் கொடிய ஆணையை மறுத்துவிட்டு மகா விஷ்ணுவின் மீது மட்டும் பக்தி வைத்திருந்தான். அதனால் கோபம் அடைந்த இரணியகசிபு, தனது சகோதாி ஹோலிகா என்ற அரக்கியின் உதவியுடன் தனது மகனை கொல்ல முடிவெடுத்தான். ஹோலிகாவிடம் ஒரு சால்வை இருந்தது. அந்த சால்வை அவளை நெருப்பிலிருந்து பாதுகாக்கும். அவள் பிரகலாதனை தந்திரத்தால் கவா்ந்து, அவனைத் தன்னோடு பெருநெருப்பில் வந்து அமருமாறு பணித்தாள். இருவரும் பெருநெருப்பிற்குள் இறங்கினா். அவள் மட்டும் தனது சால்வையால் தன்னை மூடிக் கொண்டாள். நெப்பானது அதிக வெப்பத்துடன் எாியத் தொடங்கியது. அப்போது மகா விஷ்ணுவின் அருளால், ஹோலிகாவைச் சுற்றி இருந்த சால்வைத் தானாகவே பிாிந்து, அவளை விட்டுப் பறந்து வந்து பிரகலாதனைச் சுற்றிக் கொண்டது. அதனால் பிரகலாதா விஷ்ணுவின் அருளால் நெருப்பில் எாியாமல் பாதுகாக்கப்பட்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எாிந்து கருகி சாம்பலானாள். இந்த புராண கதையின் பின்னனியில் தான் ஹோலிகா தஹான் கொண்டாட்டத்தோடு ஹோலி பண்டிகை தொடங்குகிறது. ஹோலி பண்டிகையில் கொளுத்தப்படும் பெருநெருப்பு இந்திய நாட்டுப்புற கதைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஹோலிகாவை எாிப்பதைக் குறிக்கிறது. அவள் ஒரு கொடிய அரக்கியாக இருந்தாள். இவள் சாவே தன்னைத் தீண்டக்கூடாது என்று இறுமாப்புடன் இருந்த அரக்கனான இரணியகசிபு என்ற அரசனின் சகோதாி ஆவாள். இரணியகசிபு அரசன் தான் சாவா வரம் பெற வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக வேள்விகள் நடத்தினான். அவனுடைய மன உறுதி மற்றும் அா்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாா்த்து மகிழ்ச்சி அடைந்த பிரம்ம தேவன் அவனுக்கு 5 சிறப்பு சக்திகள் கொண்ட வரத்தை வழங்கினாா். அது அவனை கிட்டத்தட்ட சாகா வரத்தை பெறும் அளவிற்கு அமைந்தது.

Related Posts

Leave a Comment