தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை…!!

by Column Editor

இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல், பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளைமறுநாள் முதல் 14 ஆம் தேதி வரை, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு ஏதுமில்லை என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வருகிற 12-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 13-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்றைய அறிக்கையில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Related Posts

Leave a Comment