மாசிமகம் திருவிழா: பிப்.16ம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் உள்ளூர் விடுமுறை…

by Column Editor

மாசிமகம் திருவிழாவை ஒட்டி வரும் 16ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்களுக்கு திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என அரசு அறிவித்துள்ளது.

மாசி மாத பௌர்ணமியுடன் , மகம் நட்சத்திரம் கூடிவரும் நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் கூடி வருவது சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் மாசிமக தினத்தில் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு, நதிகள், குளங்கள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடி வழிபடுவர்.

அந்தவகையில் இந்த ஆண்டு வரும் 16 ஆம் தேதி மாசிமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மாசிமக நாளன்று புதுச்சேரியில் உள்ள திருக்காஞ்சியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நிலையில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment