இந்தியாவில் மேலும் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!!

by Column Editor

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் முழமையாக ஓயவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றன. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பல்வேறு முன்னெச்சரிக்கை காரணத்தினால் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 50,407 பேர், நேற்று 44,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அத்துடன் கடந்த 24மணிநேரத்தில் 346 பேர் கொரோனாவால் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் 5,09,011பேர் உயிரிழந்துள்ளனர் .

அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,930 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,16,77,641 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை4,78,882 ஆக குறைந்துள்ளது. . தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.19% ஆக உள்ள நிலையில் இதுவரை 172.95கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment