தமிழகத்தில் நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது!!

by Column Editor

தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி நோய் தொற்று கட்டுப்படுத்தும் வகையில் நாளை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 16ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் செயலின் மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் என்றும் , வாடகை கார்கள் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் ரயில் நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஊரடங்கு நாளில் பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கான நாளை ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகள் முழு ஊரடங்கு நாளில் இயக்கப்படாத நிலையில் ஆம்னி பேருந்துகளும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment