விஜய்யின் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட பிக் பாஸ் ராஜு! என்ன ரோல் தெரியுமா?

by Column Editor

விஜய் டிவி சீரியல் புகழ் நடிகர் ராஜூ பிக் பாஸ் 5ம் சீசன் மூலமாக புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார். டைட்டில் ஜெயித்த அவர் தற்போது அளித்து வரும் பேட்டிகளில் தான் ஒரு தீவிர விஜய் ரசிகன் என ராஜு கூறி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ராஜு தான் விஜய்யின் நண்பன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததாக கூறி இருக்கிறார். ஷங்கர் இயக்கிய அந்த படத்தில் ராஜு சென்டிமீட்டர் ரோலில் நடிக்க இருந்தார். பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் மில்லிமீட்டர் வளர்ந்து சென்டிமீட்டர் ஆகிவிட்டது போல கிளைமாக்ஸில் காட்டப்படும். அந்த ரோலில் நடிக்க ஷங்கரை அணுகி இருக்கிறார் ராஜு.

ஆனால் ராஜுவின் கண்கள் பிளாஷ்பேக் காட்சியில் வரும் மில்லி மீட்டர் பையன் உடன் ஒத்து போகாததால் வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். இந்த தகவலை ராஜு தற்போது அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Related Posts

Leave a Comment