2,454 தெருக்களுக்கு சுத்து போட்ட கொரோனா… அலறும் சென்னை மாநகராட்சி!

by Lifestyle Editor

இந்தியாவிலேயே கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களில் தமிழகம் ஒன்று. தமிழகம் அபாயக் கட்டத்தில் இருக்கிறது. தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டுமே 23 ஆயிரத்து 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தான் கொரோனா உச்சம் பெற்றுள்ளது. அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இரு வாரங்களுக்கு முன்பு வெறும் 200 கேஸ்கள் மட்டுமே பதிவாகி வந்தன.

ஆனால் இன்றைய நிலவரப்படி பார்த்தால் பல மடங்கு அதிகரித்துள்ளது. மாநகர மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் மட்டுமே 50 ஆயிரத்து 977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் பெட்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. இன்னொரு புறம் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கொரோனாவிலிருந்து மீள்வதால் நிலைமை தீவிரமாகவில்லை. முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ஆகியவை கைகொடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எல்லையில் மொத்தமாக 39 ஆயிரத்து 537 தெருக்கள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரத்து 454 தெருக்களில் வசிப்பவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 280 தெருக்களில் 10 முதல் 25 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல 583 தெருக்களில் 6 முதல் 10 பேருக்கும், 1,591 தெருக்களில் 3 முதல் 5 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் பல முயற்சிகளை மாநகராட்சி மேற்கொள்ளவிருப்பதாகக் கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment