தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

by Lifestyle Editor

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விடுத்துள்ள அறிக்கையில், இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக,சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், எனினும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிசி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மறுநாள் (18.01.22) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி,காரைக்கலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment