பிக்பாஸ் முடிந்தவுடன் தொடங்கும் பிரபல நிகழ்ச்சி ?

by Lifestyle Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நிறைவுபெற்ற அடுத்த வாரமே ‘குக் வித் கோமாளி சீசன் 3’ தொடங்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.‌

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக இருப்பது ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிக்கரமாக நிறைவுபெற்றது. இதில் முதல் சீசனில் நடிகை வனிதாவும், இரண்டாவது சீசனில் காரக்குழம்பு கனியும் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து மூன்றாவது சீசன் தொடங்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே கசிந்தன. இந்த சீசனில் பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷ்னி, தர்ஷன், மனோபாலா, வித்யுராமன், சிவாங்கி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சீசனில் களமிறங்கவுள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 வரும் ஜனவரி 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோவில் உங்க ஆல் டைம் ப்ளாக்பஸ்டர் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தொடங்குகிறது. உங்க ஃபேவரைட் கோமாளிகள் அல்ட்ராசிட்டியில், புது போட்டியாளர்கள் கலர்புல் என்ட்ரியில் கலாட்டா சமையல் அரங்கேறப் போகுது. உங்க கவலையெல்லாம் பறக்கப்போகுது. இப்படி கோலாகலமாய் நிகழ்ச்சி தொடங்குவதாக ப்ரோமோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் முடிந்த அடுத்த வாரமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்குவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment