சுந்தர் சி நடிப்பில் உருவாகும் ‘தலைநகரம் 2’… நாளை பர்ஸ்ட் லுக் வெளியீடு!

by Column Editor
0 comment

சுந்தர் சி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைநகரம்’ படத்தின் 2-ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

2006-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி கதாநாயகனாக அறிமுகமான படம் ‘தலைநகரம்’. சுராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ்ட் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.

தற்போது தலைநகரம் படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இயக்குனர் வி.இசட்.துரை இந்தப் படத்தை இயக்குகிறார். சுந்தர்.சி – வி.இசட்.துரை கூட்டணி இந்தப் படத்துக்கு முன்னதாக ‘இருட்டு’ என்ற படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகவும் குஷ்பு, ஆர்யா மற்றும் ஜீவா மூவரும் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment