இந்த விஷயத்தில் தளபதி 66 திரைப்படம் தான் No.1, வெளியான புதிய தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..

by Column Editor

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படமும் வசூலில் புதிய சாதனைகளை படைக்க தயாராகவுள்ளது.

இதனிடையே பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தளபதி 66 திரைப்படம் தான் தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளை சேர்ந்த நடிகர்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment