255
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான்.
பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டான் திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கள் பாடல் வெளியாகி யூடியூப்பில் பார்வைகளை குவித்து வருகிறது.
இதனிடையே இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி டான் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் அன்று அப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.