தளபதி 66 முதல் பாடல் பற்றி வந்த சூப்பர் அப்டேட்! யாரு பாடுறாங்க தெரியுமா

by Column Editor

தற்போது பீஸ்ட் படத்தில் பிசியாக இருக்கும் நடிகர் விஜய் அதை முடித்தபிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார்.

அதன் ஷூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதம் தான் தொடங்கும் என தெரிகிறது. பீஸ்ட் படத்திற்கு பிறகு சில மாதங்கள் இடைவெளி எடுத்துகொண்டு அதன் பிறகு தான் விஜய் இதில் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

தமன் இசையமைக்க உள்ள நிலையில் தற்போது முதல் பாடல் பற்றி ஒரு முக்கிய தகவல் வந்திருக்கிறது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தான் இந்த பாடலை பாட உள்ளனர்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி விஜய் ரசிகர்களுக்கு அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Posts

Leave a Comment