சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களுடன் டெல்லி புறப்பட்டது விமானப்படை விமானம்

by Column Editor

முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 விமானப்படை வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வெலிங்டன் சதுக்கத்தில் வீரர்களின் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வு முடிந்து, 13 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டது.

Related Posts

Leave a Comment