அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ட்ரைலர் அப்டேட்

by Column Editor

ஆர்ஆர்ஆர் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘பாகுபலி’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கி வரும் பிரம்மாண்டப் படம் ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லலூரி சீதா ராமாராஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ராமராஜுவாக ராம் சரணும், கொமாரம் பீமாக என்டிஆரும் நடித்துள்ளனர்.

இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை டிவிவி தானய்யா நிறுவனம் தயாரித்துள்ளனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்ஆர்ஆர் படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படக்குழுவினரும் படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். படத்திலிருந்து வெளியாகும் அனைத்து அப்டேட்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. tடிசம்பர் 3-ம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Posts

Leave a Comment