விஜய்யின் அரபிக் குத்துன்னா சும்மாவா… 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை !

by Lifestyle Editor

‘பீஸ்ட்’ படத்தின் அரபிக்குத்து பாடல் டியூடிப்பில் வெளியாகி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதனால் இந்த படத்தை வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தங்க கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் முழுக்க முழுக்க விஜய்யின் ஆக்ஷன் அதிரடிகள் நிரம்பி இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் உருவான ‘அரபிக் குத்து’ பாடல் வெளியானது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் துள்ளலான நடனத்தில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களின் விருப்பமான பாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் இப்பாடல் யூடியூப்பில் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அரபிக் குத்துன்னா சும்மாவா என ஆர்பரித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment