ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து…அதிரடி முடிவு…நடந்தது என்ன ?

by Lifestyle Editor

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, வினாத்தாள் வாட்ஸ் அப்பில் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது .

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சுமார் 1, 754 மையங்களில் இன்று ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருந்தது. 2 ஷிஃப்ட்களாக தேர்வு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், முதல் ஷிப்ட் காலை 10 மணிக்கும் இரண்டாவது ஷிப்ட் 2.30 முதல் 5 மணி வரையும் நடக்க இருந்தது. இந்நிலையில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, வாட்ஸ் அப் குழுக்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. இது சக தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த செய்தி வெளியானதை அடுத்து மாநிலம் முழுவதும் எஸ் டி எஃப்(STF) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வினை எழுதி இருந்த நிலையில் தேர்வு ரத்தாகியிருக்கிறது. இருப்பினும் ஒரு மாதத்திற்குள் மீண்டும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அம்மாநில சட்டம ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் தெரிவித்திருக்கிறார். அதேபோல் விண்ணப்பதாரர்கள் புதிதாக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

Related Posts

Leave a Comment