பாலா, பாரதிராஜாவால் முடியாத கதையை கையில் எடுக்கும் சசிகுமார்!?

by Column Editor

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் குற்றப்பரம்பரை படத்தை கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் ‘குற்றப் பரம்பரை’ படத்தை எடுப்பதில் பல படைப்பாளர்களுக்கு ஆர்வம் நிலவி வருகிறது. தமிழின் பெரிய இயக்குனர்கள்களான பாரதிராஜா மற்றும் பாலா இருவரும் குற்றப்பரம்பரை படத்தை உருவாக்க மிகவும் முயற்சி செய்தனர். ஆனால் அந்தப் படத்தை எடுப்பதில் பல சர்ச்சை நிலவியது.

வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் குற்றப்பரம்பரை படத்தை இயக்க இருப்பதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.

சட்டத்தை எதிர்த்து தன் உயிரையும் கொடுக்க தயாராக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் போராட்டத்தை எழுதியிருந்தார் பேராசிரியர் இரத்தினகுமார். அவரின் கதையை இயக்குனர் பாரதிராஜா குற்றப் பரம்பரை என்ற பெயரிலே திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். அதற்காக, தேனியில் பெரிய அளவில் தொடக்கவிழாவெல்லாம் நடத்தினார்கள். ஆனால் பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

தற்போது நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ‘குற்றப் பரம்பரை’ படத்தை கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. வேலராமமூர்த்தியும் அவருடன் இணைந்து பணியாற்றவிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகுமார் அந்தப் படத்தை இயக்கி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment