விஜய் அடுத்த படத்தின் கதை இதுவா…?

by Column Editor

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தின் கதை இணைய தளங்களில் கசிந்து உள்ளது.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பிறகு பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது விஜய்க்கு 66-வது படம்.

இந்த படத்தின் கதை மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. படத்தில் விஜய் எரோடோமேனியா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவராக நடிப்பதாக கூறப்படுகிறது. மனநோய் பாதிப்போடு வாழ்க்கையில் எப்படி போராடுகிறார். அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதை என்று இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.எரோடோமேனியா என்பது ஒரு அரிய மனநோயாகும். இந்த மன நோயால் பாதிக்கப்பட்டவர் தன்னை மற்றவர் விரும்புவதாக நினைத்து கொள்வாராம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இந்த படம் காதல் சென்டிமெண்ட் கலந்த அதிரடி சண்டை படமாக இருக்கும் என்கின்றனர். வம்சி இயக்கிய தோழா படத்தில் நாகார்ஜுனாவை கழுத்திற்கு கீழ் எந்த பாகங்களும் செயல்படாத பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவராக காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment