மீண்டும் சிவா இயக்கத்தில் தல அஜித்தா, கசியும் தலவல்கள்

by Column Editor

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித் அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதக கூறப்படுகின்றது.அந்த படத்தையும் போனிகபூர் அவர்களே தயாரிக்கவுள்ளார், இதை தொடர்ந்து அஜித்தை இயக்க சுதா கொங்கரா மற்றும் தியாகராஜா குமரராஜாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

ஆனால், தற்போது இயக்குனர் சிவாவும் அஜித்தை வைத்து படம் இயக்கவுள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ளது.

ஒரு சில பேட்டிகளில் அதை அவரும் உறுதிப்படுத்தியுள்ளார், ஏற்கனவே இந்த கூட்டணி வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம் ஆகிய படங்களை தந்தது.இதை தொடர்ந்து அடுத்த ‘வி’ என்ன படமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment