சூர்யா – பாலா படத்தின் படப்பிடிப்பு எப்போது ?

by Column Editor

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்படிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில் திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் பாலா. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் சினிமாவில் அவக்கென்று தனி இடம் உள்ளது. இன்றைக்கும் இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் நந்தா. இந்த படத்திற்கு பிறகுதான் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் சூர்யா.

இதையடுத்து இந்த படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் எப்போது துவங்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ஆடிஷன் இயக்குனர் பாலாவின் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதோடு சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தையில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் போட்டோஷூட்டும் துவங்கவுள்ளது. இந்த படத்தை முடித்து சிறுத்தை சிவாவின் ஒரு படத்திலும், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் அடுத்தடுத்து சூர்யா நடிக்கவுள்ளார்.

Related Posts

Leave a Comment