மீண்டும் வெறித்தனமான கதாபாத்திரத்தில் தல அஜித்..

by Editor News

தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் தல அஜித் இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தியில் வெளியான பிங்க் என்னும் படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்ட இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

அதன்பிறகு மீண்டும் H. வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித் நடித்து முடித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக போகும் இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்து வழங்குகிறார்.

இந்நிலையில் அஜித் மீண்டும் தன் அடுத்த படத்தில், இயக்குனர் வினோத்துடன் கைக்கோர்க்க உள்ளார் எனும் தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டும் இல்லமல் இப்படத்தில் வாலி மற்றும் மங்காத்தா படங்களில் நடித்தது போல, முழுக்க முழுக்க நெகடிவ் ரோலில் நடிக்கப்போவதாக மற்றோரு தகவலும் தற்ப்போது கசிந்துள்ளது.

வாலி, மங்காத்தாவில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த அஜித்தை, மீண்டும் அதுபோல ஒரு கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகவே இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment