குவியும் மக்கள் – இன்று முதல் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு

by Column Editor

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். சென்னை நகரைப் பொறுத்தவரை கடந்த 6ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருவதுடன் மழை நீரை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் அம்மா உணவகத்தில் இந்த மழை முடியும் வரை இலவசமாக உணவு அளிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநகராட்சி சார்பாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அதற்கென்று இருக்கும் சமையல் கூடங்களில் சமைத்து, சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி போன்றவற்றை தயார் செய்து எங்கிருந்து மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் தொடர் மழை காரணமாக அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. வழக்கத்தைக் காட்டிலும் அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை நேரத்தில் இன்னலுக்கு ஆளாகி உள்ள பொதுமக்கள் இலவச உணவு வழங்கப்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment